ஹரியின் பெயரை
தன் பெயராய் கொண்டவன் அவன் !
தன் பெயருக்கு ஏற்றார் போல்
தான் செய்யும் லீலைகளால்
கிருஷ்ணனுக்கு ஒப்பானவன் !
சிந்தும் சிரிப்பில் அனைவரையும்
தன் வசப்படுதுபவன் !
கொஞ்சும் மழலையில் பேசி
தன் காரியங்களை சாதிப்பவன் !
ஆனால்,
உணவை கண்டதும் ஓடும் ஓட்டத்தில்
தன் தாயையே மிஞ்சுபவன் !
என்னையும் அவன் தாயாய் ஆக்கியவன்!
அவன்தான்
நான் பெறாமல் பெற்ற மகன் "ஸ்ரீஷ்"