ஊடல்...
காதலுக்கு அழகு...
எனக்கும் இயற்கைக்குமான காதல்...!
செந்நீர் ஓடையும்...
நறுமண மலர்களும்...
மலர் தொடர் வண்டுகளும்...
தோரண மழை துளிகளும்...
பனி கண்ணீர் சிந்தும்
துளிர் கண்களும்...
நிலா முகமும்...
குங்கும சூரியனும்...
நீலவான் சேலையும்...
விண்மீன் நகைகளும்...
நீ மட்டும் அழகாக...!!!???
ஓரவஞ்சனை ஏன்???
சமத்துவமறியா இறைவன்...
படைத்தான் வட்டுலகம்...
இடம் வேறு...
நாடு வேறு...
மொழி வேறு...
இனம் வேறு...
நிறம் வேறு...
விதி வேறு...
விதைத்த விதை ஆலமரமாகி...
விளையாட்டு வினையாகி...
ஏன்? ஏன்?
ஓரவஞ்சனை....???
யாம் என் பாவம் செய்தோம்?
உன் பொழுதுபோக்கு
எனது வாழ்க்கை?!
நீ சமுத்திரத்தையும்
நிலத்தையும் படைத்தாய்...
ஏன் பிரித்தாய்?
இயற்கையை மட்டும்
அழகாய் படைத்தாய்...!
அழகு ஆபத்து என்று உணர்த்தவா...?
பெண்ணும் அப்படித்தான்...
என்ன ஒற்றுமை...?
இயற்கையும் பெண்...!!!
பேதைமைகளுக்கு நடுவே
புதைந்து கிடக்கும்...
இப்பூமியில் நீ தேடும்
புதையல்தான் என்ன....?
உயிர் பந்தை உருட்டியது போதும்...!?
பற்றி எரியும் வயிறுகள் ...
எத்தனை! எத்தனை!
தாய் தன் குழலியை
(பி.கு) உன் படைப்பு...
வருத்துவதில்லை....
நீ உன் குழந்தைகளை....?ஏன்....?ஏன்...?
நல்லவர் சாதி...
கெட்டவர் சாதி...
ஆயின்...
யார் நல்லவர்...?
யார் கெட்டவர்...?
விடைகளை எல்லாம் சேர்த்து வை....
இயற்கை எய்தி
உனை சந்திப்பேன்...
விடைகளோடு காத்திரு...
ஒரு உலகம்...
ஒரே உலகமாய்..
ஒன்றை தயாரிப்போம்....!!!???