கரும் தோட்டத்தில் ஒரு வெள்ளை மலர்,
உன்னை கண்டு வியக்காதவர் எவரும் இலர்...
நீ குளுமயானவள் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்...
உனக்கு ஜலதோஷமா என்ன,
மழை பெய்யும் போது மேகங்களை
இழுத்து போத்தி கொள்ள???
என் மனதில் நீ வகிப்பதோ
ஒரு பெரிய பங்கு....
அவ்வாறு இருக்கும் பொழுது,
என்னை விட்டு நீ மாதம் ஒரு முறை செல்வதெங்கு???
நீயும் மனிதனும் ஒன்று...
நான் இவ்வாறு சொல்வதற்கு ஒரு
உறுதியான காரணம் உண்டு...
மனித வாழ்கையோ ஒரு நிலையற்று,
ஏற்ற தாழ்வு காண்கிறது...
அதே போல்,
உன்னில் பிறை வளர்கிறது, தேய்கிறது....
உன்னை நினைக்கும் போது,
என்னில் தோன்றுவதை எல்லாம் இப்படி
கிறுக்கிக்கொண்டு இருக்கிறேன்....
எனக்கு கவிதை எழுத தெரியாது என்பதை கூட மறந்துவிட்டு!!!